மாலையில் விளக்கேற்றும் போதும், கோயில்களில் விளக்கு வழிபாடு செய்யும் போதும் இந்த ஸ்லோகத்தை அவசியம் வாசியுங்கள். ஸ்லோகம் சி ரமமாக இருந்தால் அதற்குரிய பொருளைப் படியுங்கள். வாழும் காலத்தில் பொருள் வளமும், வாழ்வுக்குப் பின் சொர்க்கமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூ மியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி...இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.