ஸ்ரீ என்பதற்கு திரு என்று பொருள். ஸ்ரீ தேவி என்று லட்சுமியைக் குறிப்பிடுவர். திருமகள் என்பது அதன் பொருள். பெண்களின் பெயர்களோடு ஜெயஸ்ரீ, பாக்யஸ்ரீ என்று வருவதும் லட்சுமியின் பெயர்களே. ஆண்களுக்கு ஸ்ரீ என்றும், பெண்களுக்கு ஸ்ரீமதி என்றும் மரியாதை கருதி சொல்வது லட்சுமி கடாட்சத்துடன் அவர்கள் வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.