பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
12:06
கோவை: மருதமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் நிகழ்ச்சி, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவையில் உள்ள பழமையான மலைக் கோவில்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்நிலையில், நேற்று வைகாசி விசாகம் விழாவை முன்னிட்டு, வடவள்ளியை சேர்ந்த முருகன் பக்தர்கள், பால் குடம் எடுத்து பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். அதேபோல், விழாவை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிகழ்ச்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, கடவுள் அருள் பெற்றனர்.