கோதண்டராமசுவாமி கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2015 11:07
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கோதண்டராமசுவாமி கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு கோயில் முன் உள்ள மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனைகளை ராஜேஷ் பட்டர், கோதண்டராமன் பட்டர் நடத்தினர். பேஷ்கார் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி, சுவாமி தினமும் இரவு 7.30 மணிக்கு பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 21ல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன் செய்துள்ளனர்.