கிள்ளையில் தெப்பல் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2015 10:07
கிள்ளை: கிள்ளை குளுந்தாளம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. கிள்ளை, சின்ன வாய்க்கால் மற்றும் பில்லுமேடு பட்டரையடி உள்ளிட்ட 4 கிராமங்கள் சார்பில் கிள்ளையில் உள்ள குளுந்தாளம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தெப் பல் உற்சவம் நடந்தது. அதையொட்டி கடந்த 15ம் தேதி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து காவடி பால்குடம் எடுத்தல், சக்தி கரகம் எடுத்தல், சுவாமி வீதியுலா, வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை உற்சவம் நடந்தது. தெப்பல் உற்சவத்தை முன்னாள் அமைச்சர் கலைமணி, முன்னாள் மீனவ நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தனர். தெப்பல் உற்சவத்தையொட்டி அலங்கரிக்கப்பட்ட சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள் குளத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் குட்டியாண்டிசாமி, கிராம நிர்வாகிகள் வீரத்தமிழன், ராஜேந்திரபி ரசாத், ஞானபிரகாஷ், ரத்தினசாமி, நீதிமணி, செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.