பதிவு செய்த நாள்
22
ஜூலை
2015
12:07
நாமக்கல்: பொன்விழா நகர் முத்துமாரியம்மன் கோவிலில், ஜூலை, 24ல், சீதா ராகவ திருக்கல்யாண மஹோத்ஸவம் நடக்கிறது.நாமக்கல், பொன்விழா நகர் முத்துமாரியம்மன் கோவிலில், தர்மரஷ்ணஸமிதி சார்பில், ராமாயண தொடர் சொற்பொழிவு, கடந்த, 15ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஈரோடு மண்டல இணை அமைப்பாளர் நல்லகணேசன் ஏற்பாடு செய்துள்ள இத்தொடர், ஜூலை, 24ம் தேதி வரை நடக்கிறது. தொட்டியம் தமிழாசிரியர் சுப்ரமணியம் சொற்பொழிவாற்றுகிறார். தினமும், மாலை, 6 முதல், இரவு, 8 மணி வரை நடக்கும் இந்நிழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டு ரசிக்கின்றனர். நிறைவு நாளான, ஜூலை, 24ம் தேதி சீதா ராகவ கல்யாண மஹோத்ஸவம் நடக்கிறது. அன்று காலை, 8 மணிக்கு, வஸந்த மாதவ பூஜை துவங்குகிறது. காலை, 9 மணிக்கு, சீதா ராகவ மஹோத்ஸவம், சாய் பிரசாத் பாகவதர் தலைமையில் அவரது குழுவினர் நடத்துகின்றனர். காலை, 11 மணிக்கு சீர் வரிசை எடுத்தல், பகல், 12 மணிக்கு, முத்துக்குத்தல் மற்றும் ஸ்வாமிக்கு விசேஷ உபசார பூஜைகள் நடக்கிறது. அதை தொடர்ந்து, மதியம், 1 மணிக்கு, ஸ்வாமிக்கு மாங்கல்ய தாரணம் திருக்கல்யாண மஹோத்ஸவம், 1.30 மணிக்கு, ஆஞ்சநேய உத்ஸவம், 2 மணிக்கு, பிரசாத வினியோகம், அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.