எல்லா சுகபோகங்களையும் அருளும் சிவபெருமான், நமக்கு தேவையில்லாதவற்றை, நாம் விரும்பாததை தனக்காக வைத்துக் கொண்டுள்ளார். இதுதான் கருணையும், எளிமையும் இணைந்த திருவருள். உலக போகங்களையே பெரிதும் விரும்பி மயங்காமல் வாழவும், இறுதியில் நம் உடல் கைபிடிச்சாம்பல் தான் என்பதை உணர்த்தவும் சுடலைப்பொடி பூசி அருள்கிறார்.