கஸ்யபர், அதிதி ஆகியோருக்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பிள்ளைகளாக இருந்தனர். இவர்கள் மகாவிஷ்ணுவைத் தங்கள் பிள்ளையாகப் பெற வேண்டித் தவமிருந்தனர். அவர்களின் தவத்தை ஏற்ற விஷ்ணு, ஆவணி மாதம் வளர்பிறை துவாதசியும், திருவோணமும் சேர்ந்த நன்னாளில் வாமன மூர்த்தியாகப் பிறந்தார். வாமனரைக் கண்ட அதிதி, சிரவண மங்களா (ஓண நாளில் மங்களமாய் வந்தவனே) என்று சொல்லி மகிழ்ந்தாள். இந்திரனின் தாய் வயிற்றில் பிறந்ததால், வாமனர் உபேந்திரன் எனப்பட்டார். இதற்கு இந்திரனுக்குப் பின்னால் பிறந்தவன் அதாவது இந்திரனின் தம்பி என்று பொருள்.