விழுப்புரம்: விழுப்புரம் பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, விழுப்புரம் வைகுண்ட வாசல் பெருமாள் கோவிலில், உறியடி உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி பெருமாளுக்கு, கிருஷ்ணர் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு, கோவிலுக்குள் சுவாமி வீதியுலா நடந்தது. மகாதீபராதனைக்கு பின், இரவு 7:00 மணியளவில், கோவில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.