மதுரை : திருமலையில் மதுரை ஸ்ரீவாரி சேவாக்கள் புஷ்ப யாக சேவையில் ஈடுபடுகின்றனர். குழு தலைவர் ராம்லால் கூறியதாவது: திருப்பதி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரமோற்சவ விழா முடிந்தபின், ஏழுமலையானுக்கு மலர்களால் புஷ்பயாகம், அர்ச்சனை நடக்கும். விழாவை முன்னிட்டு, திருமலை தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 18 ரக மலர்களை ஆயிரக்கணக்கான கூடைகளில் நிரப்பி, கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.நவ.,18ல் நடக்கும் புஷ்பயாகத்தில் பங்கேற்க மதுரை ஸ்ரீவாரி சேவா குழுவினர் (இருபாலர்), திருமலை செல்கின்றனர். அங்கு 8 நாட்கள் தங்கி தேவஸ்தானம் சார்பில், பக்தர்களுக்கு சேவை செய்வர். உணவு, தங்குமிடம் இலவசம். விரும்புவோர் 98431 84179ல் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.