பதிவு செய்த நாள்
14
செப்
2015
11:09
மயிலாடுதுறை: திருவெண்காடு கோவிலில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பெயரில், அவரது மனைவி துர்கா சிறப்பு பூஜை செய்தார். நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த, திருவெண்காட்டில், தேவார பாடல் பெற்ற, சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, புதன் பகவான், அகோர மூர்த்திக்கு, தனி சன்னிதி உள்ளது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா, நேற்று, தன் சொந்த ஊரான திருவெண்காடு வந்தார். பின், சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று, சுவாமி, அம்பாள், புதன், அகோரமூர்த்தி மற்றும் துர்க்கையம்மன் சன்னிதிகளில், ஸ்டாலின் பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் நடத்தி வழிபட்டார். துர்காவுடன், அவரது சகோதரிகள் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். புதனை வழிபட்டால், அரசியலில் மேன்மையும், அகோரமூர்த்தியை வழிபட்டால், சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.