குருமூர்த்தக் கோவிலில் மறைஞான சம்மந்த சுவாமிகள் குரு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2015 10:09
சிதம்பரம்: சிங்காரத்தோப்பு குருமூர்த்தக் கோவிலில் மறைஞான சம்மந்த சுவாமிகள் குரு பூஜை நடந்தது. தஞ்சை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான சிதம்பரம் திருக்களாஞ்சேரி என்ற சிங்காரத்தோப்பு குருமூர்த்தக் கோவிலில் மறைஞான சம்மந்த சுவாமிகள் குரு பூஜை நடந்தது. இதனையொட்டி காலை 9:30 மணிக்கு திருத்தணி சுவாமிநாதன் தலைமையில் சிதம்பரம் ஆலவாய் அண்ணல் தேவாரப்பாட சாலை மாணவர்கள் பன்னிரு திருமுறை தேவாரம் திருமுறை விண்ணப்பம். 10:30 மணிக்கு மறைஞான சம்மந்த சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வழிபாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு திருவாவடுதுறை தம்பிரான் சுவாமிகள் வர வேற்றார். நிகழ்ச்சியில் சிதம்பரம் ஆசிரியர் பொன்னம்பலம், ‘திருவருட்பயனில் குருவருட் சிறப்பு’ தலைப்பில் சொற்பொழிவாற்றினார். மாலை சிதம்பரம் ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை தேவாரப் பாடசாலை மாணவர்களின் திருமுறை இன்னிசை மற்றும் குருமரபு வாழ்த்து நிகழ்ச்சி நடந்தது.