திரவுபதியம்மன் கோவிலில் சாமி சிலைகள் கரிக்கோல வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2015 11:09
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில், கரிக்கோலம் நடந்தது. இக்கோவிலிலுக்கு, புதியதாக திரவுபதியம்மன், போர்மன்னன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல், வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு, வரதராஜப்பெரு மாள் சிலையும், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் ஆகிய சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சிலைகளின் கரிக்கோல வீதியுலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.