இதில் என்னைய்யா குழப்பம்...ஆயிரம் என்றால் ஒரு எண், என்று இந்த தலைப்பை பார்த்து முடிவு செய்து விடாதீர்கள். குருஷேத்திர யுத்த களத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் உயிரை விடுவதற்காக காத்திருந்தார். அப்போது, கிருஷ்ணர் அவர் அருகில் வருகிறார். அவரைப் பார்த்ததும் பீஷ்மர் கிருஷ்ணரை ஆயிரம் பெயர்சொல்லி வணங்கினார். இதையே விஷ்ணு சகஸ்ரநாமம் என்பர். சகஸ்ரம் என்றால் ஆயிரம். இதன்படி பார்த்தால், பகவானுக்கு ஆயிரம் பெயர் தான் உள்ளது போலும் என்று முடிவு செய்து விடக்கூடாது. அவனுக்கு எண்ணிக்கையில் அடங்காத பெயர்கள் உள்ளன. ஆயிரம் என்ற சொல்லுக்கு அளவிட முடியாதது என்ற பொருள் இருப்பதாக, விஷ்ணு தர்மம் என்ற நுõலில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் தான் விஷ்ணுவுக்கு மட்டுமின்றி, பிற தெய்வங்களுக்கும் சகஸ்ரநாமம் எழுதினார்கள்.