மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வாழ்வில் யோகம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2015 02:10
உயர்ந்த நோக்கத்துடன் வாழும் மிதுன ராசி அன்பர்களே!
சுக்கிரன், சனி மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவர். செவ்வாய் நவ. 5 வரை நன்மை தருவார். புதன் அக். 26 வரையும், நவ. 13 க்கு பிறகும் நன்மை தர இருக்கிறார். பின்தங்கிய பொருளாதாரம் சீர்படும். தடைகள் படிப்படியாக விலகும். யோகமான காலமாக அமையும். குடும்பத்தில் தேவையான வசதிகள் கிடைக்கும். மாதத் தொடக்கத்தில் பொன், பொருள் சேரும். கணவன்- மனைவி இடையே நெருக்கமான சூழ்நிலை உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் போன்ற சுப விஷயம் குறித்த பேச்சில் முன்னேற்றம் உண்டாகும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னை மறையும். செவ்வாயால் நவ. 5க்கு பிறகு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். அக். 31 நவ. 1,2ம் தேதிகளில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
பணியாளர்கள் தங்கள் கோரிக்கையை நவ. 5க்குள் கேட்டு பெறுவது நல்லது. பாதுகாப்பு தொடர்பான பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நவ. 13 க்கு பிறகு வளர்ச்சி காண்பர். சிலருக்கு பதவி உயர்வு காண்பர். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.
கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த முன்னேற்றம் காணலாம்.
விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பயறு வகைகளில் மகசூல் அதிகரிக்கும். கால்நடை வகையில் வருமானம் உயரும். புதிய சொத்து நவ. 5 க்குள் வாங்கலாம்.
மாணவர்கள் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவர். புதனால் நவ.13க்கு பிறகு கல்வி வளர்ச்சி காணலாம். போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.
பெண்களுக்கு பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும்.
நல்ல நாள்: அக். 19, 20, 25, 26, 27, 28, 31,நவ.1,2,5,6,7,15,16
கவன நாள்: அக். 21,22 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்: காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவபெருமானையும், புதனன்று குல தெய்வத்தை வணங்குங்கள்.
பகிர்கcopied
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »