கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) சொத்து யோகம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2015 02:10
பாச உணர்வுடன் பழகி மகிழும் கன்னி ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் நவ. 2ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். மாதம் முழுவதும் சனியால் நன்மை உண்டாகும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருக்கின்றன. முக்கிய முடிவுகளை தீர ஆலோசித்த பிறகே செயல்படுத்த வேண்டும். எதிலும் விடாமுயற்சி தேவைப்படும். பணப்புழக்கத்தில் குறையேதும் இருக்காது. குடும்ப பிரச்னை, உறவினர் கருத்துவேறுபாடு, பொருள் இழப்பு ஆகிய அனைத்தும் அக். 26க்கு பிறகு மறையும். நவ. 2 க்கு பிறகு பெண்களால் நன்மை ஏற்படும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். முன்னேற்றமான சம்பவம் வாழ்வில் நடந்தேறும்.
தொழில், வியாபாரத்தில் எதிரி தொல்லை இருந்தாலும், லாபம் குறையாது. நவ. 2 க்கு பிறகு, பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல வளர்ச்சிஅடையும். நவ. 8,9 ல் அதிர்ஷ்டவசமாக ஆதாயம் கூடும். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். வேலைப்பளு அதிகரிக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். அக். 26 க்கு பிறகு இடமாற்ற பீதி மறையும். நவ. 13 க்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு பணியில் கவனம் தேவை.
கலைஞர்கள் நவ. 2 க்கு பிறகு, புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கப் பெறுவர். அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு இல்லாமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் கடின முயற்சி தேவைப்படும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கப் பெறுவர். பால் வியாபாரத்தின் மூலமும் நல்ல லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் யோகமுண்டு.
பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கப் பெறுவர்.நவ. 2 க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்படைவர். பதவி உயர்வும் கிடைக்கும்.
நல்ல நாள்: அக். 18,25,26,31 நவ. 1,2,3,4,8,9,12,13,14
கவன நாள்: அக். 27,28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்: காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். நவ. 2 வரை காயத்ரி தேவிக்கு தீபமேற்றுங்கள். வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
பகிர்கcopied
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »