பதிவு செய்த நாள்
26
அக்
2015
11:10
பழநி: பழநியில் கந்தசஷ்டி விழா, நவ., 12ல் மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.பழநி மலைக்கோவிலில், நவ., 12ல் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பகல் 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையில் காப்பு கட்டுதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம், 17ல் நடக்கிறது. இதை முன்னிட்டு, அன்று அதிகாலை, 4:00 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதிகாலை, 4:30 மணிக்கு, படையல் நைவேத்தியம் நடக்கிறது. அன்று இரவு, 7:00 மணிக்கு தங்கரத புறப்பாடு கிடையாது. திருக்கல்யாணம், நவ., 18ல் நடக்கிறது.