பதிவு செய்த நாள்
27
அக்
2015
11:10
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி, மந்தமாக நடைபெற்று வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு ÷ கள்விக்குறியாகி உள்ளது. திருப்போரூர், கந்தசாமி கோவிலின், சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்த குளத்திற்கு, பக்தர்களின் பாதுகாப்புக்காக, சுவர் கட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, ஆறு மாதங்களுக்கு முன், சுவர் கட்டும் பணிகள் துவங்கின. தற்போது, குளத்தின் இரு பக்கங்களுக்கு மட்டுமே சுவர் கட்டும் பணிகள் முடிந்துள்ளன. கிருத்திகை, சஷ்டி போன்ற முக்கிய நாட்களில், கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவுள்ள நிலையில், சுவர் கட்டும் பணி மந்தமாக நடைபெறுவதால், பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், அதிருப்தியடைந்த பகுதிவாசிகளும், பக்தர்களும் சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கந்த சஷ்டி விழா துவங்கும் முன், சுவர் அமைக்கும் பணிகளை முடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.