பதிவு செய்த நாள்
27
அக்
2015
11:10
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே மாயம்பெருமாள் கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகே கழுகரையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் மாயம்பெருமாள் கோவில் கும்பாபிேஷக பணிகள், கடந்த 10 ம்தேதி முளைப்பாரி போடுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு அமராவதி, திருமூர்த்தி நதிகளிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு மங்கள வாத்தியம் கணபதி,ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரகசாந்தி உள்ளிட்ட பூஜைகளும், இரவு, 9:00 மணிக்கு விமானகலசம் பி ரதிஷ்டை, எந்திரபிரதிஷ்டை நடந்தன. நேற்று, காலை, 5:00 மணிக்கு மங்கள வாத்தியம், கணபதி பூஜை, பஞ்சகவ்யபூஜை, 6:50 மணிக்கு கலசம் புறப்பாடும், 7:00 மணிக்கு கும்பாபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள், மகா தீபாராதனைக்குப்பின், அன்னதானம் வழ ங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.