திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பகுதியிலுள்ள சிவன்கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ம ங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் அன்னா பிஷேகவிழா நடந்தது. காலை 7:30 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு 35 கிலோ சாதம் வடித்து மூல வருக்கு அன்னஅலங்காரமும், மாலை 6:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. இரவு 8:30 மணிக்கு மூலவருக்கு சாத்திய அன்னத்தை சண்டிகேஸ்வரருக்கு நைவேத்யம் செய்யப்பட்டு, குளத்தில் கரைக் கப்பட்டது. பின், அன்ன அலங்காரத்தை கலைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெங்கட கிருஷ்ணன், உபயதாரர்கள் ரவிச்சந்திரன், மணி கண்டன், சங்கரிசுரேஷ், லட்சுமிகோவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர். இதேப்போல் டி.எடையார் மருதீஸ்வரர், தென்மங்கலம் சீதப்பட்டீஸ்வரர் கோவி லில் மூலவருக்கு அன்னாபிஷேக விழா நடந்தது.