பழநியில் காப்புகட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2015 04:11
பழநி: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புகட்டுதல் நடந்தது. பக்தர்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவங்கியுள்ளனர். மூன்றாம் படைவீடான பழநியில் நவ.,12 முதல் 18 வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது. மலைக்கோயிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது. அதே நேரத்தில் பக்தர்களும் தங்கள் கையில் காப்புக் கட்டி, சஷ்டிவிரதத்தை துவங்கியுள்ளனர். இதைப் போலவே திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களிலும் முருகப்பெருமானை வழிப்பட்டு ஏராளமான பக்தர்கள் கையில் காப்புக்கட்டி கொண்டனர். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் நவ.,17, திருக்கல்யாணம் நவ.,18ல் நடக்கிறது.