குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2015 12:11
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் கந்தசஷ்டி விழா கடந்த 12ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் முருகன் வீதி உலாவின்போது, சூரபதுமன் தாரமுகன், சிங்கமுகன் உருவங்களில் எதிரெழுந்து வந்தார். நேற்று பகல் 1.30 மணிக்கு சண்முகநாத பெருமான் திருக் கரங்களிலிருந்து வேல் எடுத்து வரப்பட்டு, கீழ் இருக்கும் உற்சவ மூர்த்தியிடம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து சுவாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வர, சூரபதுமன் எதிர்சேவை வந்தார். சுவாமியுடன் குதிரை வாகனத்தில் வீரபாகு, மயில் வாகனத்தில் முத்துகந்தர், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் மற்றும் பல்வேறு சுவாமி எழுந்தருள, மாலை 6 மணிக்கு கோயில் சன்னதி முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின், சுவாமியிடம் இருந்த, வேல் மலைக்கு எடுத்து செல்லப் பட்டது. தொடர்ந்து மலைமேல் இருக்கும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இன்று மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு தங்கரத வீதி உலாவும் நடந்தது. ஏற்பாடு களை திருக்கோயில் பரம்பரை அறங் காவலர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்திருந்தார்.