பதிவு செய்த நாள்
18
நவ
2015
12:11
விருத்தாசலம்: கார்த்திகை மாதத்தையொட்டி ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான வேட்டி, துண்டு, மாலை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மகோற்சவம் நேற்று முன்தினம் துவங்கி வரும் டிசம்பர் 27ம் தேதி வரை நடக்கிறது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், கார்த்திகை 1ம் தேதி முதல் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்ப சுவாமியை சென்று தரிசிப்பது வழக்கம். நேற்று கார்த்திகை 1ம் தேதி என்பதால், விருத்தாசலம் கடைவீதியில் உள்ள கடைகளில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான கறுப்பு, நீலம், மஞ்சள், காவி, பச்சை உட்பட வண்ண வேட்டி, துண்டு; துளசி, ருத்ராட்சம், பவழம், சந்தனம், தாமரை மாலைகள், பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதில், வேட்டி 75 முதல் 250 ரூபாய் வரையும், மாலைகள் 30 முதல் 50 ரூபாய் வரையும் விற்கப்படுகின்றன. இன்று கார்த்திகை 1ம் தேதி என்பதால், ஐயப்ப பக்தர்கள் ஆர்வமுடன், வேட்டி, துண்டு, மாலை மற்றும் பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.