நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் 60 நாள் மதியம் அன்னதான திட்டம் துவங்கியது. நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதி முதல் தை மாதம் 1ம் தேதி வரை 60 நாட்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார். தலைவர் வைத்தி, செயலர் சாமிப்பிள்ளை பொருளாளர் குமார், கல்யாணசுந்தரம், குருசாமி, ராதா, சிவகுருநாதன், முருகன், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.