பதிவு செய்த நாள்
18
நவ
2015
12:11
சேலம்: கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹார விழாவில், திரளாக பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம், ஊத்துமலை முருகன் கோவில், பேர்லாண்ட்ஸ் முருகன் கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், கந்தாஸ்ரமம் முருகன் கோவில், ஏற்காடு அறுபடை முருகன் கோவில், செவ்வாய்ப்பேட்டை சித்திரை சாவடி முருகன் கோவில் உட்பட, அனைத்து முருகன் கோவில்களிலும், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, நேற்று காலையில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில், முருகன், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, இன்று கல்யாண உற்சவமும், நாளை வசந்த உற்சவமும் நடக்கிறது.
* ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், சூரசம்ஹார விழா நடந்தது.
* சேலம், ஜாகீர் அம்மாபளையம், பழனியாண்டவர் கோவிலில், சூரசம்ஹார விழா நடந்தது.
* சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது.