Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பைரவர் என்ற சொல்லுக்கு பொருள்! குன்றில் இறங்கி வழிபடும் கீழ்பழநி! குன்றில் இறங்கி வழிபடும் கீழ்பழநி!
முதல் பக்கம் » துளிகள்
கோயிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்?
எழுத்தின் அளவு:
கோயிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்?

பதிவு செய்த நாள்

02 டிச
2015
03:12

இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் 16விதம், 32 விதம், 64 விதம் என்பதாக வேறுபாடுகள் உண்டு. ஆனால் அனைத்துவிதமான பூஜைகளிலும் (நெய்) தீபம் காண்பிப்பதும், கற்பூரம் காண்பிப்பதும் கட்டாயம் உண்டு. தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல் அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம். அதன் பிறகுதான் பக்தன் இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்வதற்காகக் காண்பிக்கப்படும் (பச்சை) கற்பூரம் ஏற்றி காண்பிக்கும் கற்பூர உபசாரம்.

ஆகவே, தீபம் ஏற்றி வழிபாடு, கற்பூரம் காண்பித்து வழிபாடு இரண்டும் வெவ்வேறான பூஜா உபசாரங்கள். தற்சமயம் சில கோயில்களில் சில இடங்களில் (கற்பூரத்தால் அந்த இடம் மாசுபடுவதாக - தவறாக எண்ணிக்கொண்டு) இறைவனுக்கு கற்பூரம் காண்பிக்க வேண்டிய சமயத்திலும் கூட, தீபத்தையே ஏற்றிக் காண்பிக்கப்படுகிறது. ஆனால், இவை இரண்டுக்கும் தனித்தனியே வெவ்வேறு பலன்கள் உண்டு.

காந்திர் தீப ப்ரதானத; என்பதாக இறைவனுக்கு எவ்வளவு எவ்வளவு தீபங்கள் ஏற்றுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்தனின் மனதிலும், வாழ்விலும். குடும்பத்திலும் காந்தி என்னும் ஒளிப்பிரகாசம் ஏற்படும். இருள் அகலும் கற்பூரம் காண்பிப்பதால் மனதிலுள்ள அழுக்குகள் விலகி, மனம் இறைவனிடமே ஒன்றிவிடும். தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது அந்த தீபத்தில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படாது. ஆனால், கற்பூரம் காண்பிக்கும்போது, அந்தக் கற்பூரம் சிறிது சிறிதாக உருகிக் கரைந்து போகும். இறுதியில் கற்பூரம் முழுவதுமாக எரிந்து போய் எதுவும் மீதமிருக்காது. கற்பூரத்தைப் போல் பக்தர்கள் இறைவனிடத்தில் மனதை செலுத்த வேண்டும். மனது கற்பூரம்போல், கரைந்துவிட வேண்டும். மனது கரைந்தால், தான் என்னும் எண்ணம் விலகி இறைவனுடனே ஜ்யோதி ஸ்வரூப மாகக் கலந்து விடும். இதை இறைவன் பக்தனுக்கு அருளுவார். இந்தத் தத்துவத்தையே இறைவனுக்கு கற்பூரம் ஏற்றிக் காண்பிப்பதன் மூலம் நாம் தெரிந்துக் கொள்கிறோம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar