புதுச்சேரி: ஐயங்குட்டிப்பாளையம் மார்கண்டேயன் மடத்தில் மார்கழி மாத பஜனை ஊர்வலம் நேற்று நடந்தது. மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 லட்சத்து 70 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவான சிவ லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. 6 மணிக்கு சிவனடியார்கள் பஜனையுடன் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் தங்கவேலு, நிர்வாகி சந்திரசேகரன் செய்திருந்தனர்.