வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவர் கோயில் வளாகத்திலுள்ள ஐயப்பன் மணி மண்டபத்தில் மண்டல பூஜை விழா நடந்தது. இவ்விழாவிற்காக சிவ வைணவ கோயில்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த குடங்களை பால்கேணி மேட்டில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஐயப்பன் மணி மண்டபத்தில் உலக நன்மை கணபதி ஹோமம், கஜ(யானை) பூஜை, 108 சங்கு, 108 கலச அபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
* வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோயிலிலும் மண்டல பூஜை நடந்தது. திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேக வழிபாடுகளும், இரவில் அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் சுவாமி நகர் வலமும் நடந்தது.