பதிவு செய்த நாள்
28
டிச
2015 
12:12
 
 விருத்தாசலம்: விருத்தாசலம் சபரி ஐயப்பன் கோவிலில், நேற்று சிறப்பு பூஜையுடன் நடை சாத்தப்பட்டது. விருத்தாசலம், பாலக்கரை  அன்னமய நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள சபரி ஐயப்பன் கோவிலில் 5ம் ஆண்டு சக்தி பூஜை விழா, கடந்த மாதம் 17ம் தேதி துவங்கி,  வரும் ஜனவரி 15ம் தேதி மகர ஜோதியுடன் முடிகிறது.கடந்த 16ம் தேதி சக்தி பூஜையொட்டி, மணிமுக்தாற்றிலிருந்து புனிதநீர் கலசம்,  பால்குட ஊர்வலம், கருப்புசாமி, மஞ்சள் மாதா வேடமணிந்து வீதியுலா, கன்னி பூஜை, இரவு பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. 17ம்  தேதி திரு விளக்கு பூஜை நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போல, இக்கோவிலிலும் நேற்று இரவு நடை சாத்தப்பட்டது.  இதையொட்டி, சபரி ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 18 படி பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு ஆபரணங்களுடன்  சுவாமி அருள்பாலித்தார். வரும் ஜனவரி 15ம் தேதி மகர ஜோதி விழா நடக்கிறது.