சென்னையில் முதன் முறையாக ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2015 12:12
சென்னை: வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக சற்று ஒத்தி வைக்கப்பட்ட ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை, சென்ற டிசம்பர் 19ம் தேதி, சென்னை மீனம்பாக்கம் ஏ,எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. வெள்ளத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் யாவும் நீங்க ஒரு சிறப்புப் பிரார்த்தனையுடன் தொடங்கிய ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை பக்தி பூர்வமாக வெங்கடராம குருசாமி அவர்களின் தலைமையில் வேத கோஷங்களுடன் இனிதே நிறைவடைந்தது. உலகில் முதன் முறையாக பரம பவித்ரமான 1008 விளக்குகளில் ஐயப்பனை ஆவாஹனம் செய்து நடந்தது இக் கோடி அர்ச்சனை. அபூர்வ சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் இவ்விளக்குகள் வீட்டில் வைத்திருந்தால் சகல சுபிட்சங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இவ்விளக்குகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை 9 கம்பர் தெரு, நிலமங்கை நகர், ஆதம்பாக்கம், சென்னை 600 088 தொடர்புக்கு 99622 51215 அல்லது 99620 51215.