கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடை மாலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2016 01:01
பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி ரயில் நிலைய பணிக்காக வந்த கற்களில் ஒன்று ஆஞ்சநேயர் வடிவில் இருந்தது. அதை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபடத் தொடங்கினர். ஒருநாள் அங்கு வந்த ரயில்வே அதிகாரி ஆர்ம்ஸ்பி, ஆஞ்சநேயர் சிலை மீது கால் தடுக்கி விழுந்தார். கோபம் கொண்ட அவர், உடனே அந்தச் சிலையை அகற்ற உத்தரவிட்டார். அவர் ஒரு ஆங்கிலேயேர். அன்றிரவு குரங்குகள் சூழ்ந்து கொண்டு துன்புறுத்துவது போல அவருக்கு கனவு ஏற்பட்டது. மறுநாளே ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயருக்கு புதிய கோவில் கட்ட அனுமதியளித்தார். சிறியளவில் கட்டப்பட்ட அந்தக் கோவில் பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. திருச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ரயில்வே காலனியில் இந்தக் கோவில் இருக்கிறது. உலக நன்மைக்காக ஜன.9 அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். 7.00 மணிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை, ஒரு லட்சத்து எட்டு ஜாங்கிரி மாலை சாத்தப்படுகிறது. 9.00 மணி முதல் ஏக தின லட்சார்ச்சனை துவங்கும். இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா வருவார். விழாவில் பங்கேற்க விரும்புவோர் 0431- 231 5073 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.