Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீடு ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) குடும்பத்தில் மகிழ்ச்சி! துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) வேலைப்பளு உயரும்!
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) வேலைப்பளு உயரும்!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
02:01

எல்லாரையும் மதித்து நடக்கும் கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி, கேது மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். அபார ஆற்றல் பிறக்கும். புதன் பிப். 6 வரை சாதகமாக இருந்து பலன் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் மறைமுக போட்டியாளர்களால் இடையூறு வரலாம். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பிப். 9,10ல் பணவரவு அதிகம் இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஜன. 26,27,31ல் சந்திரனால் தடைகள் வரலாம். பிப். 6க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாகவெளியூர் பயணம் ஏற்படலாம். இந்த பயணங்கள் ஓரளவுக்கு வருமானத்தைக் கொடுக்கும்.

பணியாளர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பதவிஉயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஜனவரி 21,22,23ல் எதிர்பாராத நற்பலன் கிட்டும். பிப். 6க்கு பிறகு வேலை காரணமாக சிலர் குடும்பத்தை பிரியலாம். வேலையில் அலைச்சலும் பளுவும் அதிகம் இருந்தாலும் மலைத்து விடாதீர்கள்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்துசேரும்.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி இருக்கும். நினைத்த பதவி கிடைப்பது தள்ளிப்போகும்.

மாணவர்கள் சிறந்த மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். போட்டிகளில் வெற்றிகாணலாம்.

விவசாயிகளுக்கு சுமாரான வருமானம் கிடைக்கும். காய்கறி, பழ வகைகள் நல்ல விளைச்சல் இருக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். ஜனவரி 15,16, பிப். 11,12ல் நகை வாங்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: ஜன. 15,16,21,22,23,24,25,28,29,30, பிப். 2,3,4,9,10,11,12.

கவன நாள்: ஜன 17,18, சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,6. நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: தினமும் காலையில் எழுந்து சூரியனை வணங்குங்கள். ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து அர்ச்சனை செய்யுங்கள்.

 
மேலும் வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் ... மேலும்
 
temple news
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், ... மேலும்
 
temple news
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar