ராமேஸ்வரம் :ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி--அம்மன் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று இரவு கோயில் அருகில் கட்டப்பட்டுள்ள புதிய கல்யாண மண்டபத்தில் சுவாமி - அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. சிவாச்சாரியார்களின் வேதமந்திரம், கெட்டிமேளம் முழங்க கோயில் குருக்கள் உதயகுமார் சுவாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்ய கயிற்றை, அம்மனுக்கு அணிவித்தார். தொடர்ந்து சுவாமி- அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மணமக்கள் அலங்காரத்தில் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.