பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
கோவை : பூண்டியில் உள்ள லிங்க பைரவி சன்னிதியில், தைப்பூச திருநாள் கொண்டாட்டம் நடந்தது. வருடந்தோறும், தைப்பூச திருநாளன்று, லிங்க பைரவி கோவிலில், பெண்களுக்கான சிவாங்கா சாதனா எனும் நிகழ்ச்சி நடக்கிறது. நடப்பாண்டு நடந்த நிகழ்ச்சியில், பல இடங்களில் இருந்து, 7,000த்துக்கும் மேற்பட்ட பெண்கள், 21 நாட்கள் விரதமிருந்து, தேவியின் அருளைப் பெற, முளைப்பாரி எடுத்து, லிங்க பைரவி சன்னிதானம் அடைந்தனர்.விரதத்தை முடித்துக் கொள்ள வந்த பெண்கள், தானியம், தேங்காய் அர்ப்பணித்தனர். முளைப்பாரியிலேயே, லிங்கபைரவியின் உருவத்தை வடிவமைத்து, தேரில் வைத்து, சன்னதிக்கு கொண்டு வந்தனர்.