பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
கோத்தகிரி: கோத்தகிரி அருள்மிகு வெற்றிவேல் முருகன் கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது. முக்கிய திருவிழா நாளான, நேற்று, காலை, 5:30 மணிக்கு, ஸ்ரீ சுப்ரமண்ய மூலமந்தர, மாலா மந்தர ஹோமம், அஸ்த்ர ஹோமம், மகா அபிஷேகமும், காலை, 9:00 மணிக்கு, மகா தீபாராதனை, காலை, 11:00 மணிக்கு, பகவத் சைதன்ய சுவாமிகளின் கலை நிகழ்ச்சி திருப்புகழ் இசை வழிபாடும், பாரதிய வித்யா பவன் மாணவ, மாணவியரின் பரதநாட்டியம் இடம் பெற்றது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, திருத்தேர் வடம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கொடி இறக்குதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.* ஊட்டி எல்க்ஹில் பாலதண் டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 1.00 மணிக்கு திருத்தேர் திருவீதி உலா நடந்தது.