தியாகராஜ சுவாமி ஆராதனை விழாவில் விநாயகம் குழுவினரின் இசைக் கச்சேரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2016 11:01
புதுச்சேரி: திருவையாறில் நடந்த தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில், புதுச்சேரி விநாயகம் குழுவினரின் நாதஸ்வர, தவில் இசைக் கச்சேரி நடந்தது. திருவையாறில் நடைபெற்று வரும் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில், ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி விநாயகம் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு திருவையாறில் நடந்த 169வது ஆராதனை விழாவில், புதுச்சேரி விநாயகம் குழுவினரின் நாதஸ்வர, தவில் இசைக் கச்சேரி நடந்தது. பழைய சீவரம் காளிதாஸ், திருக்கோவிலுார் பாலாஜி ஆகியோரின் நாதஸ்வர இசையும், விநாயகம், சிவா ஆகியோரின் தவில் இசையும் வாசித்தனர்.