பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி ஜடாமகுட தீர்த்த கோயிலில் மாசி மகாமக விழாவையொட்டி நேற்று முகூர்த்த கால் ஊன்றும் விழா நடந்தது. ராமாயண வரலாற்றில் தொடர்புடைய தனுஷ்கோடி ஜடாமகுட தீர்த்த குளத்தில், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவத்தை போக்கிட, சிவன் தலையில் இருந்து உருவான இத்தீர்த்தத்தில் ஸ்ரீ ராமர் நீராடியதால், புதுபொலிவு பெற்றதாக, ராமாயணத்தில் கூறப்படுகிறது. இங்கு பிப்.,22ல் நடைபெறவுள்ள மகாமக விழாவை முன்னிட்டு நடைபெறும் தீர்த்தாவாரி நிகழ்ச்சியில் லட்ச கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடுவார்கள். விழாவை முன்னிட்டு கோயிலின் அருகில் பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முகூர்த்த கால் (ஜன.,29) ஊன்றபட்டு தீபாரதனை நடந்தது.
கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, ராதா, கமலநாதன், பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவுக்கு முன் தனுஷ்கோடி தேசிய சாலையிலிருந்து ஜடாமகுட தீர்த்த கோயிலுக்கு செல்லும் கிராவல் சாலையை தார் சாலையாக மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்கள் விரும்புகின்றனர்.