பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
பழநி: பழநியில் தைப்பூசவிழா நிறைவடைந்த பின்னரும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற தைப்பூச விழா ஜன.,18 ல் துவங்கி 27 வரை 10 நாட்கள் நடந்து
முடிந்தது. அதைத் தொடர்ந்து தற்போதும் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் உடுமலை, தாராபுரம் ரோட்டில் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக இடைப்பாடியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், இளநீர், பால், மயில் காவடிகள் எடுத்து பழநிக்கு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பக்தர்கள் பிரத்ேயகமாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முதுகில் வாள் குத்தியும், கம்பத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்தும் கிரிவீதியை வலம் வந்தனர். இவர்களை போலவே காவடிகள் எடுத்தும், தேர் இழுத்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்றும், நாளையும் இடைப்பாடி பர்வதராஜகுல மகாஜனங்களின் ஆறு ஊர்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பழநி வந்து மலைக்கோயிலில் தங்கி சிறப்புபூஜை செய்து வழிபடஉள்ளனர்.