பதிவு செய்த நாள்
08
மார்
2016
11:03
திருவண்ணாமலை: மகா சிவாரத்திரியை முன்னிட்டு, திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்தில், மகா ருத்ர யாக பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணர் ஆஸ்ரமத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, செந்தில் கனபாடிகள், ஜம்புநாத கனபாடிகள் தலைமையில், 108 வேத விற்பன்னர்கள் பங்கேற்ற, மகா ருத்ர யாக பூஜை நடந்தது. இந்த பூஜைக்கு பின், பகவான் ரமணருக்கு கலசாபிஷேகம் நடந்தது.ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மாலை, 6:00 மணி முதல், இன்று அதிகாலை வரை நான்கு கால பூஜை, நள்ளிரவில் லிங்கோத்பவர் பூஜை, ஏகாதசி ருத்ரபாராயணம் நடந்தது.