பதிவு செய்த நாள்
11
மார்
2016
11:03
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் 18ம் தேதி நடப்பதை முன்னிட்டு, இந்த சிறப்பு பகுதி.. பண்ருட்டி சரநாராயண பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசன்போல், மார்க்கண்டேய மகிரிஷி புத்திரி ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு, நின்ற திருக்கோலத்தில், திவ்ய தம்பதியாக எழுந்தருளியுள்ளார். அருகில், மிருகண்ட மகிரிஷியின் குமாரர் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி பிரதிஷ்யம். ஸ்ரீதேவி தாயார் அயோனிதி அவதாரம். இப்பெருமாள், அமாவாசையில், சிறந்த பிரார்த்தனை தெய்வமாக விளங்குகிறார். பெருமாளை, 7 அமாவாசைகளில், அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டால், சகல மனக் கவலையும் நீங்கி, பரிபூரண ஆனந்தத்தை தருகிறார். கோவிலில் ஸ்ரீசயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்துள்ளார். தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால், போகசயனத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள், திருவக்கரையில் வக்ராசூரனை வதம் செய்து, ஸ்ரம பரிகாரத்துக்காக இத்தலத்தில் சயனித்துள்ளார். பிரதி மாதம் பிரதோஷத்தில், திரு மஞ்சனம் நடக்கிறது. 700 ஆண்டுக்கு முன், காஞ்சி வேதாந்த தேசிகர், திருவந்திபுரம் யாத்திரை செல்லும் வழியில், சயனநரசிம்மனை ÷ சவித்துள்ளார். சயனகோலத்தில் நரசிம்ம பெருமாள் காட்சியளிப்பது இங்கு மட்டுமே. வேறு எங்கும் இல்லை.