பதிவு செய்த நாள்
11
மார்
2016
11:03
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவில், 459ம் ஆண்டு கந்துாரி விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று நண்பகல், 12:00 மணிக்கு, நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் கொடி ஊர்வலம் புறப்பட்டு, நாகையில், 40 வீதிகள், நாகூரில், 14 வீதிகள் வழியாக வலம் வந்து, தர்கா அலங்கார வாசலை இரவில் வந்தடைந்தது. பின், தர்காவின் ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டு, தர்கா பரம்பரை கலிபா, துவா ஓதிய பின், கொடியேற்றும் வைபவம் நடந்தது.