கிள்ளை: கிள்ளை சரவணாநகர் கல்யாண கண்ணன் கோவில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 22ம் தேதி காலை மண்டல அபிஷேகமும், இரவு தி ருவிளக்கு பூஜையும் நடந்தது. சிதம்பரம் தாலுகா, கிள்ளை சரவணா நகரில் அப்பகுதி இளைஞர்கள் கல்யாண கண்ணன் கோவில் கட்டினர். இதற்கான கும்பாபிஷேகம் கடந்த மாதம் 3ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை நடந்து வந்தது. 22ம் தேதி மண்டல அபி ஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜையும், மாலை திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.