பதிவு செய்த நாள்
25
மார்
2016
12:03
பெ.நா.பாளையம்: பாலமலை அரங்கநாதர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் இருந்த கொடிமரம் பழுதடைந்து விட்டதால், புதிய கொடிமரத்தை அமைக்கும் பணி துவங்கியது.கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து வேங்கை மரம் கொண்டுவரப்பட்டு, காரமடையில், 22 அடி உயரம், ஒரு அடி விட்ட அளவுகளில் செதுக்கப்பட்டு, கொடிமரமாக வடிவமைக்கப்பட்டது. பின், பிப்., 17-ல் காரமடையில் இருந்து பாலமலை கொண்டு வரப்பட்டது. கொடிமரம் பிரதிஷ்டையையொட்டி, அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாடி சிறப்பு பூஜைகள் துவங்கின. தொடர்ந்து ஹோமம், வேதபாராயணம் முழங்க கொடிமரம் பிரதிஷ்டை விழா துவங்கியது. காரமடை வேதவியாச சுதர்சன பட்டர் கொடிமரத்துக்கு தீர்த்தம் தெளித்து பிரதிஷ்டை செய்தார்.