புதுச்சேரி: கிருஷ்ணா நகர் செல்வ விநாயகர் கோவிலில் நேற்று ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. கிருஷ்ணா நகர் 12வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் 5ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை, 108 சங்காபிஷேக விழா நேற்று துவங்கியது. காலை 7:00 மணிக்கு துவங்கிய ஏகதின லட்சார்ச்சனை இரவு 10:00 மணி வரை நடந்தது. இன்று (28ம் தேதி) காலை 7:00 மணிக்கு 108 சங்கு பிரதிஷ்டை, கணபதி ஹோமம், 11:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.