பண்ருட்டி: பண்ருட்டியில் ராமானுஜ நாவலர் சுவாமிகள் சபை சார்பில் 91ம் ஆண்டு வைணவ மாநாடு நேற்று நடந்தது. புதுச்சேரி லட்சுமணகவி ஸ்ரீமத் ஏ.வே.வி. ராமானுஜ நாவலர் சுவாமிகள் சபை சார்பில் பண்ருட்டியில் 91ம் ஆண்டு வைணவ மாநாடு நேற்று வாசவி மகாலில் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை பெருந்தேவிதாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து மாநாடு ஊர்வலம் நடந்தது. 8:30 மணிக்கு கருடகொடி ஏற்றப்பட்டது. காலை 9:00 மணிக்கு திருமால் வணக்கத்தை தொடர்ந்து நடந்த மாநாட்டிற்கு வந்தவாசி சீனுவாச ராமானுஜ சுவாமி தலைமை தாங்கினார். பண்ருட்டி ஸ்ரீமத் ராமானுஜசபை தலைவர் கோவிந்தராஜ் ராமானுஜதாசர் வரவேற்றார். செயலர் செந்தமாரைகண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். திருசித்திரகூடல் ரங்காச்சாரியார் சுவாமிகள் சொற்பொழிவு, மதுரை கல்லுாரி தமிழ் பேராசிரியர் ஜெகன்நாதன் ராமானுஜசுவாமி ‘பதிகளும் பண்பாளனும்’ என்ற தலைப்பில் பேசினர். ‘கலியை வெல்ல ஹரியை பாடு’ என்ற தலைப்பில் தட்டாம்பாளையம் கோவிரவி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, கடலுார் லட்சுமண ராமானுஜரின் சொற்பொழிவு, ஸ்ரீரங்கம் சீனுவாசாச்சாரியார், கள்ளக்குறிச்சி ஆராவமுதன் சொற்பொழிவு நடந்தது. கிருஷ்ணகுமார்ராமானுஜதாசர் நன்றி கூறினார்.