பாகூர்: பாகூர் சீதா சமேத கோதண்டராமர் சுவாமி கோவிலில், 30ம் ஆண்டு ராமநவமி உற்சவம் இன்று (15ம் தேதி) துவங்குகிறது. பாகூர் அக்ரஹார வீதியில், சீதா சமேத கோதண்டராமர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 30ம் ஆண்டு ராம நவமி உற்சவம் இன்று (15ம் தேதி) ராமர் ஜனனத்துடன் துவங்குகிறது. தினமும் காலை 7:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. வரும் 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு, சீதா ராமர் திருக்கல்யாண உற்சவமும், 24ம் தேதி ராமர் பட்டாபிஷேகமும் நடக்கிறது.ஏற்பாடுகளை தனி அதிகாரி திருமால், மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.