தஞ்சாவூர்: வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கேலாகலமாக நடந்தது. இதில், ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
உலக பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மேலராஜவீதி தேரடியில் இருந்து துவங்கியது. திருமுறை பாடல்கள் ஓத, சிவகனம் இசைக்க, கோலாட்டத்துடன், சங்கு ஊத கோலாகலமாக நடந்த திருத்தேரோட்டம் நகரின் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தன. பக்தர்கள் வசதிக்காக 14 நிலைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருத்தேராட்டத்தை ஒட்டி தஞசை நகரமே விழாக்கோவலம் பூண்டுள்ளது. விழாவில், கலெக்டர் சுப்பையன், அரண்மணை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.