புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த அன்னப்பன்பேட்டை அன்னபூரணி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 21ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வாஸ்துசாந்தி, மிருத்சங்கரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், 8:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று (22ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோ பூஜை, ரக்ஷாபந்தனம், இரண்டாம்கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு கடம் புறப்பாடு செய்து 10:00 மணிக்கு அன்னபூரணி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.