சிவன் கோயில்கள்: குறைந்தது 3 முறை: அதன் மேல் 5,7,9 இவ்வாறாக விநாயகர்: ஒரு முறை அம்பாள் : 4 முறை விஷ்ணு : 4முறை முருகன் : 3 முறை
மேலே குறிப்பிட்டவாறு கோயில் வழிபாட்டு முறைகளில் கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக 3 முறையோ அல்லது விரும்பினால் அதற்கு மேல் 5,7,9 இவ்வாறாக வணங்கலாம். சில கோயில்களில் பிரகாரத்தினுடைய உட்சுவர்களிலே மேற்பாகம், நடுப்பாகம், கீழ்ப்பாகம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து மேற்பகுதியிலே தொடங்கி தொடர்ச்சியாக இறைவனின் திருச்செயல்களைச் சித்திரமாக விபரிப்பது, தேவாரங்களை எழுதி வைப்பது போன்ற முறையுமுண்டு. இப்படியான சித்திரங்களையோ அல்லது தேவாரப் பதிகங்களையோ நாங்கள் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு சென்று தொடங்கிய இடத்துக்கே வந்து திரும்பவும் இரண்டாம் மூன்றாம் முறையென்று எம்மையறியாமலே பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்துவிடுவோம்.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே. மாதொரு பாகனார் தாம்வருவார். என்று சிவஞான சித்தியார் கூறுகின்றது. எனவே சிவன்கோயில் வலம்வரும் முறையினைக் கடைப்பிடிப்பதில் தவறில்லையென்று கூறப்படுகின்றது.