பெருமாள் கோயில்களில் நவக்கிரகம் இல்லாததன் ஐதீகம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2016 03:04
சிவன் கோயில்களில் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபடுவது ஐதீகம். இந்த உலகம் முழுவதுமே லிங்க வடிவில்தான் உள்ளது. லிங்கம் என்பது பிரபஞ்சத்தின் மொத்த வடிவம். மொத்த வடிவத்தில் இருந்தே மற்ற உருவங்கள் தோன்றியதன் அடையாளங்கள்தான், சிவன் கோயில்களில் எல்லா தேவதைகளுக்கும் சன்னிதிகள் இருப்பதன் காரணம். லிங்க ரூபியாக பெருமான் இருக்கும் கர்ப்பக்கிரக கோபுரத்தில், கருவறை கோஷ்டங்களில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே இருப்பர். அதாவது, இந்த லிங்க வடிவமே மும்மூர்த்திகளாக வந்தது என்று அதன் பின்னர் பிராகாரங்களில் ஒவ்வொரு தேவதைகள் இருப்பர். அதாவது, கண்ணுக்குத் தெரியக்கூடிய லிங்காகாரமாக உள்ள பரமாத்மா, பலவித ரூபங்களை அடைகிறான் என்பது இதன் தாத்பரியம். கர்ப்பக்கிரகத்தில் லிங்கம், அடுத்த பிராகாரத்தில் பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்கள் அதற்கு அடுத்த பிராகாரத்தில் ஆவாண தேவதைகள், ஈசான்ய மூலையில் நவக்கிரக தேவதைகள் என்ற அமைப்பு. இது ஒரு ஐதீகம். இத்தன்மை பெருமாள் கோயிலுக்குக் கிடையாது காரணம். அங்கு அவன் ஒருவனே பகவான், சர்வம் விஷ்ணு மயம் ஜகத். அங்கு எல்லா ஸ்வரூபமாகவும் பெருமாளே இருப்பார். பெருமாளை வணங்கினாலே எல்லாரையும் வணங்கிய புண்ணியம் உண்டு. என்று சாஸ்திரம் சொல்வதால் பெருமாள் ஒருவருக்கே மூல சன்னிதி. வேறு யாருக்கும் கிடையாது.